29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 03.02.2014 இன்று ஆறாவது நாளாக பெல்யீயம் நாட்டின் தலைநகரான புறுசலை வைந்தடைந்தது.
இன்றைய தினம் ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள எமது மனிதநேய பணியாளர்கள் புறுசலில் உள்ள ஐரோப்பிய நாடுகளினுடைய தூதரகங்களில் உயர்மட்ட சந்திப்புகளை மேற்கொண்டனர். இன்றைய சந்திப்பில் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள எமது உறவுகள் சிங்கள பேரினவாதத்தால் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கும் விதமாக தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை இயக்கமாக அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டுமென்பதையும் கோரிக்கையாக முன்வைத்தார்கள்.
நடைபயணத்திற்கும் தமிழ் வண்டிப் பரப்புரை செயற்பாட்டுக்கும் வலு சேர்க்கும் முகமாகவும் எதிர்வரும் 10.03.2014 அன்று ஐ.நா.வின் மனிதவுரிமை மன்றின் முன் இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சிப் போராட்டமானது வரலாறு காண எழுச்சியாக திகழவேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் வாரியாக தமிழ் மக்களை ஒன்றிணைக்கின்ற செயற்பாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈடுப்பட்டுள்ளது.

0 Responses to தாயக விடுதலைக்காக 6ம் நாளாக நீதிக்கான நடைபயணம்!