Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் தொடர்ந்த தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால், இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்று த டெய்லி டெலிகிராப்பின் ஆசிய பிராந்திய செய்தியாளர் என்.நெல்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய அமெரிக்காவும், பிரித்தானியாவும் கைக் கோர்த்துக் கொண்டுள்ளன.

இதற்கிடையில் இலங்கை பாரிய யுத்தக் குற்ற நாடு என்று அறிவிப்பதற்கு, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கின்ற இலங்கை தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலருக்கு நாட்டில் பிரவேசிக்க அனுமதி மறுத்தும் வருகிறது.

அத்துடன் தம்மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. இவ்வாறு தன்னிச்சையாக செயற்படுவதன் மூலம், இலங்கை அரசாங்கம் விரைவில் தனிமைப்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது – த டெய்லி டெலிகிராப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com