காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு நேற்று யாழ்ப்பாணம் கோப்பாயில் பதிவினை மேற்கொண்டிருந்த போது, அதற்கு புதிதாக 69 முறைபாடுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாச இதனை தெரிவித்துள்ளார். இந்த முறைபாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட நடவடிக்கை நேற்று கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 66 பேரின் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to யாழ்ப்பாணம் கோப்பாயில் காணாமல் போனோர் தொடர்பில் 69 முறைப்பாடுகள் பதிவு!