Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 
சிறிலங்கா அரசாங்கம் வடமாகாணசபையை நடத்தியதைத் தவிர, தமிழ் மக்களுக்கு திருப்தியான எந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இந்திய அரசாங்கம் அதிருப்தியில் உள்ளது. எனவே கடந்த இரண்டு தடவைகளைப் போலவே, இந்த முறையும் அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணைக்கு இந்தியா தமது ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் - த ஹிந்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com