இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவும் உதவாது என்று தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரத்தை வடக்கு- கிழக்கு மாநிலங்களுக்கு வழங்கினாலே போதுமானது. அதனையே நாம் இலங்கை அரசாங்கத்திடம் கோருகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சொற்பொழிவொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இரா.சம்பந்தனின் கருத்து பொருத்தமற்றது. மாநிலங்களையொத்த அதிகாரங்கள் என்பது தமிழர்களை மீண்டும் பிரச்சினைகளுக்குள் தள்ளி சாகடித்துவிடும் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு இன்றைக்கு மாநில அதிகாரங்கள் என்கிற அளவில் பேசிக்கொண்டிருக்கிறது. இது, தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மாநிலங்களை ஒத்த அதிகாரங்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்