வடக்கு மாகாண சபை இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டாலே வடக்கிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுக்க அரசு ஒத்துழைக்குமென திருவாய் மலர்ந்துள்ளார் யாழ்.ஆயர். அத்துடன் வடக்கு மாகாண சபை இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முறுகல் நிலையே காணப்படுகின்றதெனவும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நோர்வேப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த நோர்வேயின் இலங்கைக்கான தூதர் கிறிட் லோஷன் தலைமையிலான குழுவிருக்கும் யாழ்.ஆயருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ், ஆயர்,
நோர்வேக் குழுவினர் முக்கியமாக வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர் அதற்கு நாங்கள் பதிலளிக்கையில் வடக்கு மாகாண சபையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான முரண் நிலை காரணமாக வடக்கு மாகாண சபை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமமான சூழலே நிலவுகின்றது.
அதேவேளை மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகள் அரசாங்கத்துக்கு கோபம் ஊட்டும் வகையில் அமைவதால் அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய முன்வராது. அதனால் அரசாங்கத்துடன் இணைந்து போவது போல இவர்களும் நடந்து கொண்டால் மாத்திரமே அதன் மூலம் பலன் கிடைக்கும். இதனைத் தான் அரசாங்கமும் விரும்புகின்றது.
யாழ் வந்திருந்த ஐ.நாவின் துணை செயலாளர் நாயகம் வடக்கு முதலமைச்சரையும் சந்தித்திருந்தார். வடக்கு முதலமைச்சர் ஐ.நா பிரதிநிதியிடம் கருத்துத்தெரிவிக்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் போன்ற விடயங்களை முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதேபோல மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாடுகளும் முன்வந்து உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். என்று குறிப்பிட்டதாக தெரிவித்த யாழ் ஆயர்,
கடந்த போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் மட்டுமல்ல இலங்கைக்கு வெளியிலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதேவேளை இது தொடர்பில் ஜெனீவாவிலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தாம் தெரிவித்தாகவும், இதன் போது விசாரணையின் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று நோர்வேப் பிரதிநிதி தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு, கடந்த போரின் போது பெருமளவானோர் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறான விசாரணையின் மூலம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தாம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

0 Responses to அரசுடன் இணங்கிப்போனாலே அபிவிருத்தியாம்! யாழ்.ஆயர் தகவல்!