Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

9 வருடங்களுக்கு பிறகு மோடியை முதன் முறையாக நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து அதற்கான அனுமதியை கோரியுள்ளது அமெரிக்க உயர் தூதரகம்.

இதன் அதிகாரி நான்சி பொவொல் இது தொடர்பில் மோடியிடம் நேரடியாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதையடுத்து இருவரும் எதிர்வரும் நாட்களில் (வியாழக்கிழமை?) சந்தித்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பேசுகையில், கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய - அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோருடன் தொடர்புகளை பெருக்கிக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு கட்டமாக மோடி - பொவெல் சந்திப்பும் நடைபெறும் என்றார்.

2002 குஜராத் கலவரத்தில் மோடிக்கும் பங்கிருப்பதாக குற்றம் சுமத்தி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னர் மோடியை புறக்கணித்து வந்தன. குறிப்பாக அமெரிக்கா இன்று வரை மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்குள் மோடி இலகுவில் பிரவேசிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய நாட்டுத் தூதர்கள் குஜராத்தில் மோடியை சந்தித்து நட்பு பாராட்டியதை தொடங்கி அமெரிக்காவும் தனது விசா வழங்கும் விதிமுறைகளை மோடிக்காக சற்று தளர்த்தியதுடன், மற்றையவர்கள் போல் மோடியும் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சில வேளைகளில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மோடியுடனான தொடர்பைக் கொண்டே அமெரிக்கா இந்தியாவுடனான நல்லுறவையும், இராஜதந்திர ரீதியிலான உறவையும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதனாலும் வேறு வழியின்றி மோடிக்கு எதிரான தனது பிடிவாதத்தை அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.

தற்போது அமெரிக்க தூதுவர் நான்சிபவல் மோடியை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதற்கு பாஜகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பாஜகவின் வெளிநாட்டு தொடர்பு அமைப்பாளர் சாந்திரகாந்த் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்  'அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இந்த முடிவால், இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் வலுவடையும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் அமெரிக்க தூதரக அதிகாரி நான்சி பொவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com