தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்க கூடும் என இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிப் போரில் வெளியேறிய விடுதலைப் புலிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஊடுருவி, அந்த பகுதிகளை தங்களது புகலிடமாக மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதனை நிராகரிக்க முடியாது என இந்தியாவின் யூனியன் பிரதேசமான அத்தீவுகளின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம், மேற்கு வங்கம், பீகார் வழியாக இந்த ஊடுறுவல் மேற்கோள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் வசிக்காத இத்தீவுகளை இத்தீவுகளை தமது தற்காலிகமான மறைவிடங்களாக பயன்படுத்திக் கொள்ளக் கூடும் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவு 8 ஆயிரத்து 240 சதுர அடி பரப்பளைவைக் கொண்டது என்றும், இதில் மொத்தம் உள்ள 572 தீவுகளில் 38 தீவுகள மக்கள் வசிக்காத தீவுகளாகும்.
மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கையர்கள் தீவுகளுக்குள் புகுந்துள்ளதாக அந்தமான் அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து கடந்த காலத்தில் குடியேறிஅய்வர்கள் இருக்கின்றனர் எனவும் இவர்களை பயன்படுத்தி மீண்டும் குடியேறும் சாத்தியங்கள் இருக்கலாம் எனவும் தீவுகளின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி இந்திய உள்துறை நாடாளுமன்ற நிலையியல் குழு தெரிவித்துள்ளது.

0 Responses to அந்தமான் நிக்கோபார் தீவுகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் எச்சரிப்பு!