இலங்கைக்கு சொந்தமானதும், இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் மத்தியில் அமைந்துள்ளதுமான கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த தகவல்கால திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தின் சிவகங்கை மறை மாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.
வருடாந்த தவக்கால திருவிழாவிற்கான உத்தியோகபூர்வ அழைப்பு சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இன்னமும் தமிழகத்தின் சிவகங்கை மறை மாவட்ட ஆயரிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தின் செயலாளர் எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த தவக்கால திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த வருடாந்த திருவிழாவில் இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக ஆயருக்கு, யாழ் ஆயர் அழைப்பு