Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் இராணுவம், அங்கு ஆடம்பர விடுதிகள், கோல்ப் மைதானம் மற்றும் நீச்சல் தடாகங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு வடக்கில் காணி அபகரிப்பை இராணுவமும், அரசாங்கமும் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளவும் குடியேற அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு 750 ஏக்கர் காணியில் கோல்ப் மைதானத்தை இராணுவம் அமைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று பயணம் செய்து மக்கள் சந்திப்புக்களை நடத்தியிருந்தது. அதன்போதே, மாவை சேனாதிராஜா மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே, இறுதி மோதல்களின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட அநீதியான செயற்பாடுகளுக்கே இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இராணுவம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து ஆடம்பர விடுதிகளை அமைக்கிறது: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com