எதிர்வரும் ஜெனீவாக் கூட்டத்தொடர்வரை வலி.வடக்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபடாதிருக்கக் கால அவகாசம் கோரியிருக்கிறார் யாழ். மாவட்ட இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா. வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றே அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வலி.வடக்கு மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களின் தலைவர்களுக்கும், இராணுவத் தளபதிக்கும் இடையில் நேற்று மாலை பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகத்தில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். ஏதிர்வரும் 15ம் திகதி மீள்குடியமர்வினை வலியுறுத்தி இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தன.
இது தொடர்பான இரகசியக் கூட்டமொன்று யாழ்.நகரில் நடத்தப்பட்டிருந்ததுடன் தற்போதைய சூழலில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அவற்றினை அம்பலப்படுத்த வேண்டாமென கோரப்பட்டிருந்தது. எனினும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகை மூலம் வலி.வடக்கு பிரதேசசபை தலைவரும் படைத்தரப்புடன் தற்போது நெருங்கிய உறவை பேணி வருபவருமான சுகிர்தன் அதனை அம்பலப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்தே போராட்டத்தினை முடக்க முழு அளவில் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதனிடையே வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் தொடர்பில் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. நீங்கள் ஒரு புள்ளி விவரங்களைக் கொண்டு வருகின்றீர்கள். பிரதேச செயலகம் வேறொரு புள்ளி விவரம் தருகின்றது. மீள்குடி யேற்ற அமைச்சு இன்னொரு புள்ளி விவரத்தைத் தருகின்றது. எனவே வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் சரியான புள்ளி விவரங்களை முதலில் திரட்டுங்கள் என அவர் ஆலோசனை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 24 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை முன்னிறுத்தி மீண்டுமொரு இழுத்தடிப்பு நாடகத்தினை அவர் அரங்கேற்ற முற்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

0 Responses to வலி.வடக்கு மீள்குடியமர்வு இழுத்தடிப்பில் அரசு! வக்காலத்து வாங்குகின்றது கூட்டமைப்புத் தலைமைகள்!!