Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போனோர் தொடர்பாக இராணுவ முகாம்களில் வைத்து வழங்கப்படும் மரணச் சான்றிதழ்களை அவர்களது குடும்பங்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் இரகசியத் தடுப்பு முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்படுமிடத்து இனி வருங்காலங்களில் கொல்லப்பட வாய்ப்பு ஏற்படாலாமென எச்சரித்துள்ளார் வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் காணாமல்ப் போனோரது வீடுகளிற்கு செல்லும் படையினர் டோக்கன்கைள வழங்கி அருகாகவுள்ள படை முகாம்களிற்கு வருகை தருமாறு பணித்து செல்கின்றனர். அதை தொடர்ந்து முகாம்களிற்கு குறித்த குடும்பங்கள் சென்றிருந்த வேளை காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறும் மரணசான்றிதழ்களை திணிக்கின்றனர். பெற்றுக்கொள்ள மறுக்கும் குடும்பங்கள் தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் இரகசியத் தடுப்பு முகாம்களினில் இன்று வரை சித்திரவதைகளை எதிர்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த ஜெனீவாக் கூட்டத் தொடர்களின் போது இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர்பட்டியலை வெளியிடுவதாகக் கூறினர். இன்று வரை அப்பட்டியல் வெளியிடப்படவில்லை. எனவே இரகசியத் தடுப்பு முகாம்கள் தொடர்ந்தும் உள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நாம் மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டால் உயிருடன் உள்ளவர்கள் கூட கொல்லப்பட்டுவிடலாமென அவர் எச்சரித்துள்ளார்.அதிலும் குறிப்பாக மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பாக பதிவு செய்யப்படும் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்தே தற்போது மரணசான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அப்பத்திரிகையாளர் மாநாட்டில் அனந்தி மேலும் தெரிவித்தார்.

0 Responses to மரணச் சான்றிதழை பெறுவதன் மூலம் இரகசிய முகாம்களில் உள்ளவர்கள் கொல்லப்படலாம் - அனந்தி எச்சரிக்கை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com