Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராயணசாமி இலங்கை கடற்படையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்படுவதன் ஊடாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளின் சுமூகநிலை குழப்பியடிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இந்திய அரசாங்கங்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து இரண்டு நாடுகளும் தாங்கள் தடுத்து வைத்துள்ள மீனவர்களை விடுவித்து வருகிறது.

ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து தடுத்து வைக்கின்றனர்.

இது கண்டிக்கத்தக்க விடயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அண்மையில் தமிழக கடற்பரப்பில் வைத்து 9 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழக மீனவர்களைக் கைது செய்ய வேண்டாம் - நாராயணசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com