Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 30 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் என்று பரபரப்புத் தகவலை செய்தியாளர்களிடம்   வெளியிட்டு உள்ளனர் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் இருவர்.

சஞ்சய் தத், மதன்லால் என்கிற இந்த இரண்டு ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள், தங்களுக்கு தொலை பேசி அழைப்பு வந்தது என்றும், அந்த தொலைபேசி குரல் ஆம் ஆத்மிகட்சி எம் எல் ஏக்களை பாஜகவில் இணைய வைத்து டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்த்தால் உங்களை முதல்வராக்குவோம் என்றும், 30 கோடி ரூபாய் பணம் வழங்கப் படும் என்றும் பேரம் பேசியதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த சதிக்கு காரணமானவர்கள் நரேந்திர மோடியும், அருண் ஜெட்லியும்தான் என்றும் கூறியுள்ளனர். ஆனால் டெல்லியில் ஒரு போதும் ஆத்மி கட்சி கவிழ விட மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

ஆம் ஆத்மியின் இந்த குற்றசாட்டுக்கு பாஜக கண்டனமும் மறுப்பும் தெரிவித்து உள்ளது.

0 Responses to ஆட்சியை கவிழ்க்க 30 கோடி ரூபாய் பேரம் பேசினர்!:ஆம் ஆத்மி ஏக்கள் பரபரப்பு தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com