சென்னை வண்டலூரில் நாளை நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வைகோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக-மதிமுக கூட்டணி என்பது முடிவாகி விட்ட நிலையில் சென்னை வண்டலூரில் பாஜகவின் மாநாடு பிப்ரவரி 8ம் திகதி என்று முடிவு செய்யப் பட்டது. இந்த மாநாட்டு மேடையில் மதிமுக பொது செயலாளர் வைகோவும் கலந்து கொள்வார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று இரவு முதல் வைகோ பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் நாளை நடைபெற இருக்கும் மாநாட்டில் மதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். இதனால் வைகோ பங்கேற்பது உறுதியாகவில்லை என்று தெரிகிறது. காரணம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் முடியவில்லை என்றும், ஒரு வேளை இன்று மாலைக்குள் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டால் நாளை நடைபெற உள்ள மாநாட்டில் வைகோ பங்கேற்பார் என்றும் பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to நாளை நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வைகோ பங்கேற்கவில்லை?