இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியமெனில் அது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மோதல்களின் போது இடம்பெற்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அறிவுத்தல்களை வழங்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அங்கத்துவ நாடுகளே தீர்மானிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள்