Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அவுஸ்திரேலிய செனட் சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி இப் பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தை பசுமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி செனட் சபை மூலம் வலுவான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக பசுமைக் கட்சித் தலைவர் கிறிஸ்டின் மில்னேது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்தமைக்கு PIAC என்ற அமைப்பு தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் பசுமைக் கட்சி குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோர்ட் அகதிகளுக்கு கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பசுமைக் கட்சி கூறியுள்ளது.

0 Responses to இலங்கையில் சர்வதேச விசாரணையை தேவை - அவுஸ்ரேலிய செனட்டில் பிரேரணை நிறைவேற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com