சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை நடத்தப்படுவதை எந்த வகையிலும் ரஷ்யா ஏற்றுக் கொள்ளாது என்று அந்த நாட்டின் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்யாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனடொலி விக்டோரோவ் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு சர்வதேச நாடுகள் சில கோரி வருகின்றன.
அத்துடன் இந்த விடயத்தை முன்வைத்து சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
ஆனால் அவ்வாறு பொருளாதாரத் தடை விதிப்பதாலும், விசாரணை மேற்கொள்ளப்படுவதாலும், சிறிலங்காவில் உள்ள பொது மக்களே பாதிக்கப்படுவார்கள்.
சிறிலங்காவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதன் ஊடாக மாத்திரமே கடந்தகாலப் பாதிப்புகளுக்கு நிவாரணங்களை வழங்க முடியும்.
அதனை விடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே செல்வது எந்த வகையிலும் பிரயோசனமாக அமையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to சிறீலங்காவுக்கு எதிரான அனைத்துலக விசாரணையை ஏற்க மாட்டோம் ரஷ்யா தெரிவிப்பு!