இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கி படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மோதல்களின் பின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் மாநாடொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோதல்களின் பின்னராக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தேசிய கொள்கையின் படியே எமக்கு தற்போது செயற்பட வேண்டியுள்ளது.
அந்த நிகழ்ச்சி நிரல் வடமாகாண மக்களின் எவ்வித பங்கேற்பும் இன்றியே தயாரிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான தேவைகள் குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
அத்துடன் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ள பின்புலத்தில் கீழ் மட்டும் தொடர்பில் ஆராயவில்லை. இந் நிலையில் துரித அபிவிருத்தியை நோக்கி எவ்வாறு பயணிப்பது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
0 Responses to முதலில் படையினரை முகாமினுள் முடக்கவேண்டும்! விக்கினேஸ்வரன் ஆலோசனை!