Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உக்ரேய்னின் கிரிமா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 95.5 % வீதமான கிரிமா மக்கள் சம்மதம் தெரிவித்து நேற்றைய வாக்கெடுப்பில் தமது முடிவைக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ரஷ்யாவுடன் கிரிமாவை இணைப்பதற்கு இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக விண்ணப்பிக்கப்படும் என கிரிமா தலைவர்கள் கூறியுள்ளனர்.  கிரிமாவின் மக்களின் விருப்பத்தை மதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளார்.

கிரிமாவில் வசிக்கும் ரஷ்ய பூர்வீகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ரஷ்யாவுடன் கிரிமாவை இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள போதும், பூர்வீக டாட்டார்ஸ் இனத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் இவ்வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர்.

ரஷ்யாவினால் ஆயுத முனையில் அச்சுறுத்தி இவ்வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இவ்வாக்கெடுப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடும் கண்டனம் விடுத்துள்ள நிலையில் இவ்வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் உக்ரேய்ன் தலைநகர் கியெவ்வில், மக்கள் புரட்சியினால் ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச் அதிபர் பதவியிலிருந்து பதவியிறக்கப்பட்டதுடன், அவர் ரஷ்யாவில் பாதுகாப்பு தஞ்சமடைந்திருந்தார்.  இதையடுத்து ரஷ்ய ஆதரவு படைகள் கிரிமாவை ஆக்கிரமித்து தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன.

0 Responses to வாக்கெடுப்பு : கிரிமாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 95.5% வீதமான மக்கள் ஆதரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com