Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 14.03.2014

பதிந்தவர்: தம்பியன் 14 March 2014

மேஷம்
சிவாலய வழிபாட்டினால் நன்மை காணும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டுக்கு தேவையான சில ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்க முற்படுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கலாம்.

ரிஷபம்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். நந்தி வழிபாடு நலம் சோக்கும். இளைய சகோதரரின் வழியில் இனிய செய்தியன்று வந்து சேரலாம். உத்யோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

மிதுனம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கடகம்
குடும்பச்சுமை கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற ஆண்டவனைப் பிரார்த்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்
சுணங்கிய காரியங்கள் சுறு சுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். வியாபாரம், தொழிலில் ஆக்க பூர்வமான மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.

கன்னி
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகும் சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம்.

துலாம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழிலில் திடீர் லாபம் வந்து உங்களைத் திக்கு முக்காடச் செய்யலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்படும் பிரச்சினை அகலும்.

விருச்சகம்
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

தனுசு
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.

மகரம்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லலாம். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கும்பம்
இன்பங்கள் இல்லம் வந்து சேர இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும்.

மீனம்
புகழ் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 14.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com