சட்டீஸ்கரில் இன்று மதியம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்தியப் பாதுகாப்புப் படையினர், மாநில போலீசார் 16 பேர் பலியாகி உள்ளனர்.
சட்டீஸ்கரில் மாவோயிட் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவோயிஸ்ட் தடுப்பு அமைத்து போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தி, மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநிலப் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட பலர் உயிரிழந்து உள்ளனர். இதில் மத்தியப் பாதுகாப்புப் படையினர், மற்றும் மாநிலப் போலீசார் உட்பட 16 பேரின் உடல்கள் கிடைத்து உள்ளன. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாவோயிஸ்ட் தாக்குதல் சட்டீஸ்கரில் பெரும் அச்சத்தைக் கிளப்பி உள்ளது. இதை அடுத்து சட்டீஸ்கரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டு உள்ளன. கடந்த வருடம் சட்டீஸ்கரில் மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட பலர் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலால் மத்திய பாதுகாப்புப் படையினர் 16 பேர் பலி