Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த அறிக்கையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் போலியானவை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளை தன்னுடைய இலங்கை விஜயம் மற்றும் இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கையில் எங்களது கட்சி பற்றியும், என்னைப் பற்றியும் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை பக்கச்சார்பானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டினை பெரியளவில் நம்பிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஏமாந்து நிற்கிறது. யதார்த்தமான அரசியல் செய்வதே அவசியமானது. அதைவிட்டு சர்வதேசத்தினை மட்டுமே நம்புவது பலன் தராது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானது: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com