Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 24.03.2014

பதிந்தவர்: தம்பியன் 24 March 2014

மேஷம்
மதியத்திற்கு மேல் மனநிம்மதி கிடைக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொழில் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வியாபாரப் போட்டிகள் அகலும்.

ரிஷபம்
செலவுகள் அதிகரிக்கும் நாள். சிரித்துப்பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

மிதுனம்
வரவு திருப்தி தரும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்காக பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

கடகம்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். மங்கையரால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறும்.

சிம்மம்
பிள்ளைகளால் நன்மை ஏற்படும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கன்னி
அஞ்சல் வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். பழைய வாகனத்தைப் புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.

துலாம்
சகோதர வழிச் சச்சரவுகள் அகலும் நாள். நீண்ட நாளைய வழக்குகளில் திடீர் திசை திருப்பம் ஏற்படலாம். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முன்வருவீர்கள். வியாபார விருத்தியுண்டு.

விருச்சகம்
வருமானம் திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும்.இடம், பூமியால் லாபம் கிடைக்கும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தெய்வீகத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு
விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

மகரம்
இடமாற்றத்தால் இனிய மாற்றம் காண வேண்டிய நாள். வரவும்- செலவும் சமமாக இருக்கும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. தெய்வத் திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

கும்பம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். மன மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். நீண்டதூரப் பயண வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மீனம்
நினைத்தது நிறைவேறும் நாள்.தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். எதிர்கால நலன்கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 24.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com