Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 29.03.2014

பதிந்தவர்: தம்பியன் 29 March 2014

மேஷம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். நீண்ட தூரதேசப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். கல்வி முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு நன்மை தரும்.

ரிஷபம்
இல்லத்திற்கு தேவையா பொருட்களை வாங்கி மகிழும் நாள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். கட்டிடப் பணி தொடரும்.

மிதுனம்
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வேலைப்பளு கூடினாலும் மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த உறவினர் ஒருவரை திடீரெனச் சந்திக்கலாம்.

கடகம்
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும். சிக்கனமாக இருந்தாலும், திடீர் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். புதிதாக கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உற்றார், உறவினர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக நிற்கலாம்.

கன்னி
தடைகள் அகலும் நாள். நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பிறர் நலனில்அதிகஅக்கறைகாட்டுவீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும்.

துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமையடைவீர்கள். அரசு வழிச் சலுகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். பணத்தேவைகளை நண்பர்கள் பூர்த்தி செய்வர்.

தனுசு
அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும்.

மகரம்
விருப்பங்கள் நிறைவேற விரயம் செய்யும் நாள். வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். தொழில் தொடர்பாக புதிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழியில் முக்கியச் செய்திகளைக் கேட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களை நம்பிச் செய்த வேலை நல்ல விதத்தில் முடிவடையும்.

மீனம்
அமைதியாகச் செயல்பட வேண் டிய நாள். சிறிய தவறு ஒன்றை நினைத்துப் பெரிய அளவில் கவலைப்படுவீர்¢கள். வழிப்பயணத்தில் சந்தித்தவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 29.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com