இன்று ஞாயிற்றுக் கிழமை தெற்கு ஈராக்கிலுள்ள ஹில்லா நகரில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் ஓட்டி வந்த மினிபஸ் இல் பொருத்தப் பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப் பட்டதாகவும் மேலும் 157 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலிசாரும் மருத்துவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்துத் தனது பெயரை வெளியிட விரும்பாத போலிஸ் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ஷைட்டி முஸ்லிம்கள் செறிவாக வாழும் குறித்த ஹில்லா நகரின் வடக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள பிரதான சோதனைச் சாவடி அருகே மினிபஸ்ஸை ஓட்டி வந்து தற்கொலைப் போராளி குண்டை வெடிக்கச் செய்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது. மேலும் இக்குண்டு வெடிப்பில் சிக்கி 50 கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் சோதனைச் சாவடி அருகே இருந்த கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலில் மினிபஸ்ஸை விட்டு உடனே வெளியேற முடியாத பயணிகளில் பலர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
சிரிய எல்லையிலுள்ள ஈராக்கின் மேற்கு மாநிலமான அன்பாரில் கடந்த ஒரு வருடமாக அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சுன்னி முஸ்லிம்களின் போராளிக் குழு தனது தாக்குதல்களை அதிகரித்து வலுப்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஞாயிறு நிகழ்ந்த இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் ஹில்லா மாகாணத்தின் பிரதி சேர்மேன் அல்கொய்தா இயக்கமே இதற்குப் பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வருடம் ஈராக்கில் மிக அதிகமாக 8000 பொது மக்கள் குண்டு வெடிப்புக்களாலும் தற்கொலைத் தாக்குதல்களாலும் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக்கின் ஹில்லா நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:45 பேர் பலி