இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், மனித உரிமை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அதனாலேயே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தீர்மானித்ததாக மொரீஷியஸின் வெளிவிவகார அமைச்சர் அர்வின் பூலேல் தெரிவித்துள்ளார்.
மொரீஷியஸ் வேறு நாடுகளின் அழுத்தங்களின் பேரிலேயே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்க நேற்று முன்தினம் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மறுப்பு வெளியிட்டுள்ள மொரீஷியஸின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தினாலேயே, குறித்த தீர்மானத்திற்கு இணை நாடாக ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை அமெரிக்கா முன்மொழியவுள்ளது. அந்த தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து முன்மொழியும் நாடுகளில் மொரீஷியஸூம் பிரதான இடம் வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பதே எங்களின் நிலைப்பாடு. ஐக்கிய நாடுகள் மனித மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியுமே இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதாக பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அர்வீன் பூலேல் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றமில்லை: மொரீஷியஸ் வெளிவிவகார அமைச்சர்