Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் சி130 சூப்பர் எர்குலஸ் ரகத்தைச் சேர்ந்த விமானம் குவாலியர் அருகே வெடித்து சிதறியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது.

விபத்து குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது திடீரென நிகழ்ந்துள்ள சம்பவம். விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த 08.03.2014 அன்று மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது விமானப்படை அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹெர்குலிஸ் வகையை சேர்ந்த இந்த விமானம்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட ஆறு விமான்ங்களில் ஒன்று எனபது குறிப்பிடத்தக்கது.

nakkheeran

0 Responses to இந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறியது: 5 வீரர்கள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com