மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.
புதன்கிழமையன்று, பிரெஞ்சு செய்ற்கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்ககூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டுவதாக மலேசியா கூறியது.
இந்தப் படங்கள்தான் இதுவரை கிடைத்ததிலேயே மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் அது கூறியது. இதுவரை, இந்தப் பகுதியில், விமானத்துடன் தொடர்புடைய ஒரு பொருளும் மீட்கப்படவில்லை.
இந்தப் பகுதியில் தேடிய விமானங்கள், மூன்று பொருட்களைக் கண்டதாகவும், ஆனால், பலமுறை திரும்பத் திரும்ப விமானங்கள் பறந்தும், மீண்டும் அவைகளைக் காண முடியவில்லை என்றும் ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அம்சா, கூறி உள்ளது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது. இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும். இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என மீட்பு குழு தெரிவித்துள்ளது.
nakkheeran
nakkheeran
0 Responses to 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்: தேடப்படும் பகுதி மாற்றம்