வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இன்று புதன்கிழமை விசாரித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பிரதேச சபையின் தலைவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிரதிவாதிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை!