காணாமல் போன மலேசிய விமானம் தாய்லாந்து ரேடார் கருவியில் பதிவாகி இருப்பதாக தாய்லாந்து விமான நிலையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 8ம் திகதி மலேசியாவில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் காணமல் போனது இவ்விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தைத் தேடும் பணிகளில் அமெரிக்க அரசு மலேசிய அரசுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் ரேடார் கருவியில் இவ்விமானம் பதிவாகியுள்ளது என்று தாய்லாந்து அரசு தகவல் தெரிவித்திருந்தாலும், விமானம் ரேடார் கருவியில் பதிவான நாள், நேரம் இதுக்குறித்தத் தகவல் இல்லை என்பதோடு, பதிவானது காணாமல் போன விமானம்தானா என்கிற உறுதியும் இல்லை என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to காணாமல் போன மலேசிய விமானம் தாய்லாந்து ரேடார் கருவியில் பதிவு?