Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் இன்று பிரிவினைவாதக் கோரிக்கைகள் இல்லையே என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. ஏனெனில், அதனை வைத்துக் கொண்டு இனவாத அரசியல் செய்யவே அரசாங்கம் விரும்புகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டைப் பிரித்து தரும்படி கோரவில்லை என்று இந்த அரசாங்கத்துக்கு கவலை. விடுதலைப் புலிகள் இல்லையே, இன்னொரு பிரபாகரன் தோன்றவில்லையே என்று அரசாங்கத்துக்கு கவலை. ஏனெனில், தமிழ்ப் பயங்கரவாதம், பிரிவினைவாதம், சர்வதேச சதி என்று சொல்லிச் சொல்லியே சிங்கள மக்களை தற்போதைய அரசாங்கம் ஏமாற்றி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்றைக்கு நிறைய கவலைகள் இருக்கின்றன. மக்களின் மனசாட்சியான எங்களுக்கும் அநேக கவலைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, இடம்பெயர்ந்தோர் பிரச்சினை, தோட்ட தொழிலாளர் சம்பளம் என்று பல்வேறு கவலைகள் உள்ளன. போதைவஸ்து கொள்கலன்களில் கொண்டு வரப்படுவது, அவற்றை பொலிஸ் அதிகாரியின் மனைவி விநியோகம் செய்தது, கொழும்பில் பாடசாலை பிள்ளைகள் மத்தியில் போதை பொருள் விநியோகம் செய்யப்படுவது, ஊழல், பாலியல் வல்லுறவு என்று எக்கச்சக்கமான கவலைகள் இருக்கின்றன.

ஆனால், இந்த அரசாங்கத்திற்கு தனது இந்த தவறுகளையும், குற்றங்களையும், கொள்ளைகளையும் மறைத்து அரசியல் செய்யும் வாய்ப்பு படிப்படியாக குறைந்து வருவதை எண்ணிக் கவலை. சிங்கள பெளத்த மக்களை, உசுப்பி விட்டு இனவாத அரசியல் செய்ய நாள்தோறும் வழி தேடிக்கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனவாத அரசியல் செய்யவே அரசாங்கம் ஆசைப்படுகிறது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com