Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) ஏழாம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின் கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துக்கூறிய தாக்குதல் நாளாக 2007  மார்ச் மாதம் 26 ம் நாள் கட்டுநாயக்க வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

தமிழீழ வான்படை

0 Responses to கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது புலிகள் தாக்குதல்! இன்று 7ம் ஆண்டு நிறைவு நாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com