Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில், அதுவும் அவுஸ்திரேலியாவில் உள்ள "பேர்த்" என்னும் இடத்தில் இருந்து சுமார் 1,500 மைல் தொலைவில் வீழ்ந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க இராணுவமும் நியூசிலாந்து இராணுவமும் மேலதிக தகவல்களை வெளியிட்டு மேலும் மக்களை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளார்கள். விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பின்னர், சுமார் 2 மணி நேரம் கழித்து அதே மலேசிய விமானம் மீண்டும் 4 மணி நேரம் பறப்பில் ஈடுபட்டுள்ளதை தமது இராணுவ புலனாய்வு ராடர் அவதானித்ததாக நியூசிலாந்து நாடு தெரிவித்துள்ளது. வழமையாக 36,000 அடியில் பறக்கவேண்டிய குறித்த இந்த விமானம் சுமார் 42,000 அடியில் பறந்ததாகவும் பின்னர் அது 43,000 அடியில் பறந்ததை தாம் அவதானித்ததாகவும் அன் நாடு மேலும் தெரிவித்துள்ளது.

Industry expert says pilot took Malaysian plane to 43,000ft, causing oxygen to run out, as suicide becomes likely cause of crash !

இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள். வழமையாக பயணிகள் விமானம் 35 அல்லது 36 ஆயிரம் அடி உயரத்தில் தான் பறக்கவேண்டும். அப்படி ஒரு விமானம் 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தால், அதில் ஆக்சிஜன் இல்லாமல் போகும். அதனால் தலைக்கு மேலே உள்ள ஆக்சிஜனை, சுவாசிக்கும் முகமூடி தானாகவே கீழே வரும். இருப்பினும் அங்கே இருந்த அனைத்துப் பயணிகளுக்கும், விமானத்தில் உள்ள ஆக்சிஜன் 4 மணி நேரத்திற்கு போதாது. எனவே எவ்வாறாயினும் விமானத்தை 43,000 அடியில் இருந்து கீழே இறக்கவேண்டி வரும். ஆனால் விமானி அப்படிச் செய்யவில்லை. இதனால் அந்த மலேசிய விமானத்தில் பறந்த பலர், ஏற்கனவே ஆக்சிஜன் இன்றி மூச்சை இழந்து அல்லது இறந்திருக்கலாம் என்று நியூசிலாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள், விமானத்தை இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செலுத்தி பின்னர் அது கடலில் வீழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

உண்மையாகச் சொல்லப்போனால், இந்த மலேசிய விமானத்தில் பறந்த அனைத்துப் பயணிகளும் என்ன நினைத்திருப்பார்கள் ? விமானம் கடத்தப்பட்டதா ? ஏன் இவ்வாறு நடந்தது ? என்று இதுவரை பயணித்த பயணிகளை தவிர வேறு எவருக்கும் தெரியாது. அங்கே என்ன நடந்தது என்பதுதான் அனைத்து தரப்பினரையும் யோசிக்க வைக்கிறது. அதில் பயணித்த பயணிகள் எப்படியான நெருக்கடிகளை சந்தித்தார்கள் ? அதில் உள்ளவர்கள் எவராவது தமது மோபைல் போனில் நடப்பது என்ன ? என்பது தொடர்பாக ரக்கோட் செய்து வைத்திருக்கலாம். இல்லை என்றால் மோபைல் போனில் படத்தை எடுத்து வைத்திருந்திருக்கலாம். என்றாவது ஒரு நாள் அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். சிலவேளை அதற்கு இன்னும் 20 வருடங்கள் கூட எடுக்கலாம்.

இந்த விமானம் கண்டுபிடிக்கப்படுமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கு மேலதிக விபரம் தெரியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை அமெரிக்கா எவ்வாறு மூடிமறைக்கிறதோ அதுபோல இதனையும் ஒரு காரணத்திற்காகவும், தமது சுயநலத்திற்காகவும் அவர்கள் மூடி மறைப்பதாக் கூறப்படுகிறது. ஏன் எனில் அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் வேவு பார்கும் பரப்புக்குள் தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Athirvu

0 Responses to தொலைந்த மலேசிய விமானத்தில் இருந்த பயணிகளை ஆக்சிஜன் இல்லாமல் இறந்தார்களா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com