மேஷம்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும்.
ரிஷபம்
வசதி பெருகும் நாள். வரவு அதிகரிக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வருவர். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். குறைவாகப் பேசினாலும் குறை பேசாமல் இருப்பது நல்லது. சிலரின் அன்புத் தொல்லைக்கு ஆட்பட நேரிடும். மருத்துவச் செலவு உண்டு.
கடகம்
கலகலப்பும், சலசலப்பும் மாறி, மாறி ஏற்படும் நாள். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மறைமுகப் போட்டிகள் விலகும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.
கன்னி
பிள்ளைகளின் வழியே உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பேச்சில் இனிமை கூடும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
துலாம்
அஞ்சல் வழியே அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். வருமானம் திருப்தி தரும்.
விருச்சகம்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிற இனத்தாரால் பெருமை சேரும். விருந்தினர் வருகை உண்டு. நல்லவர்களைச் சந்தித்து நலம் காண்பீர்கள்.
தனுசு
தொழில் வளர்ச்சி கூடும் நாள். பொருளாதார நலன் கருதி புதிய நபர்களைச் சந்திக்கச் செல்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மகரம்
எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். கொடுக்கல் – வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கும்பம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். திட்டமிடாத காரியமொன்று வெற்றிகரமாக நடைபெறும். வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் ஏற்படலாம். தொழில் சம்மந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
பொருள் வரவிற்கு அஸ்திவாரமிடும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
0 Responses to இன்றைய ராசி பலன் | 27.03.2014