வவுனியா, மாமடு படகு விபத்தினில் உயிரிழந்தவர்களுள் ஒருவர் ஊடகவியலாளரென அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாக கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரழந்துள்ளார்.
இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றுள்ளார். திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளார்.




0 Responses to வவுனியா படகு விபத்தினில் ஊடகவியலாளர் மரணம்!