ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை இரகசியமான முறையில் சந்தித்ததாக வெளியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவில் அமெரிக்க பிரேரணை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை இரகசியமான முறையில் சந்தித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இதனை நிராகரித்துள்ள சுமந்திரன், இரகசியமான சந்திப்பு எதனையும் தாம் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தாம் ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை சந்தித்து, அமெரிக்க பிரேரணையை ஏற்றுக் கொள்ளுமாறும், கிளிநொச்சியில் இடம்பெற்ற கைதுகளுக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இந்த சந்திப்ப நல்லெண்ண அடிப்படையில் இடம்பெற்றதாகவும், எம்.ஏ.சுமந்திரன் தம்மை சந்திக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இது இடம்பெற்றதாகவும் ரவிநாத் ஆரியசிங்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.




0 Responses to ஜெனீவாவில் சிறீலங்காப் பிரதிநிதிகளை இரகசியமாகச் சந்திக்கவில்லை - நிராகரிக்கிறார் சுமந்திரன்