பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மதுபாவனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் வடமராட்சியின் நெல்லியடியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட வன்முறைகளின் அதிகரிப்பு குறித்து சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தக் குற்றங்களைப் புரிவோர் மீதான சட்ட நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும் கோசம் எழுப்பினர். அத்தோடு, மதுபாவனை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் வடக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான செயற்பாடுகள் சமூகத்தை சீரழிக்கும் செயற்பாடுகள் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், வே.சிவயோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, குறித்த ஆர்ப்பாட்டத்தை இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் படம் பிடித்து சென்றதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து த.தே.கூ வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்!