Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பரப்பளவை மேலும் அதிகமாக்கி உள்ளது மலேசிய அரசு.

கடந்த சனிக்கிழமை அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெல்ஜிங் புறப்பட்ட மலேசியன்  ஏர்லைன்ஸ் 370 என்கிற எண் கொண்ட விமானம், சனிக்கிழமை காலை 7 மணி அளவில் பெல்ஜிங்கை சென்றடைந்து இருக்க வேண்டும். ஆனால், புறப்பட்ட 45 நிமிடங்களுக்குள் விமானத்தின் தொடர்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப் பட்டது.

விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டிக்கப் பட்டு மாயமானத் தகவலை காலை 7 மணிக்கு, மலேசிய விமான நிலைய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் உறுதிப் படுத்தினர். இதை அடுத்து மலேசிய விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் காவல் காத்துக் கிடக்கின்றனர்.

விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ள  நிலையில்,மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி, விமானம் கிடைக்கவில்லை  என்கிறத் தகவலையும் உறுதி செய்து வருகின்றனர். இன்று அவர்கள் வெளியிட்டு இருக்கும் தகவலில் விமானத்தை கடலில் தேடும் பணிகளில் அதன் தேடுதல் பரப்பளவை அதிகப் படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.   

0 Responses to விமானத்தைத் தேடும் பரப்பளவை மேலும் அதிகப் படுத்தியது மலேசிய அரசு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com