மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமாகி இன்றுடன் 23 நாட்களை கடந்துவிட்டது. மாயமான விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்திருப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக மலேசிய அரசு அறிவித்தது. இதனை யடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று விமானத்தை தேடும் பணியில் ஈடுபடும் விமானிகள் மற்றும் மாலுமிகளை பெர்த் துறைமுகத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பட் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், விமானத்தை தேடும் விவகாரத்தில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றார். மேலும் கடலின் நீளம் அதிகம் என்பதால் தேடும் பணி கடினம் என்றும், உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மொத்தம் 7 நாடுகளைச் சேர்ந்த் 20 விமானங்கள் மற்றும் கப்பல்கள் இணைந்து தேடிவருகின்றன. கருப்பு பெட்டியை கண்டறியும் கருவிகள் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்புபெட்டியின் பேட்டரி செயல் இழப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே விமானத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியும் என்பதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படுகிறது.
nakkheeran
0 Responses to உலகின் அனைத்து தொழில் நுட்பங்களும் கொண்டு மாயமான விமானத்தை தேடுவதில் தீவிரம்!