Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரினால் தன்னுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் மாகாணத்தின் பிரதம செயலாளராக விஜயலக்ஷ்மி ரமேஸ் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அதிர்ப்தி வெளியிட்டு வந்தனர்.

இது, தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனவரி மாதம் நடைபெற்ற சந்திப்பின் போதும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், ஜனாதிபதியினால் இதுவரை தீர்வுகள் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் பல தடவைகளில் குறைபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சரினால் மாகாணத்தின் பிரதம செயலாளரின் அதிகாரங்கள் குறைப்பட்டுள்ளதாக தெரிவித்தே விஜயலக்ஷ்மி ரமேஸினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம், 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிய வரும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்தார்.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் வழக்கு தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com