Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து கலைஞர் பிரச்சாரம் செய்தார்.

கலைஞர் பேசியபோது, ’’திராவிட முன்னேற்றக்கழகத்தை பழிவாங்கும் நோக்கில்தான் காங்கிரஸ் நடந்துகொண்டது.  யார் மீது பழி போடலாம், யாரை பழிவாங்கலாம் என்று ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நினைத்தார்களே தவிர, எங்களையெல்லாம் நன்றி மறந்து,  நன்றி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சூழலிலே வாழ்ந்தவர்கள்  காங்கிரஸ் கட்சியினுடைய நண்பர்கள்.

தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் காங்கிரசின் நிலைமை இன்றைக்கு இந்த அளவிற்கு தாழ்ந் திருக்கிறது என்றால்,  காந்தியடிகள் தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி,  ஜவர்கலால் நேரு தலை மையிலே இருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதலபாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால், அதற்கு காரணம் நன்றியுணர்வு இல்லாததால்தான்.    ஒரு மனிதன் வாழவேண்டுமானால் நன்றியுணர்வு இருக்க வேண்டும்.    கடந்த காலத்திலே கைதூக்கிவிட்டவர்கள் யார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், திராவிட முன்னேற்றக்கழகத்தையும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோழர் களையும்,  திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயல்களையும், அவர்கள் அலட்சியம் செய்ததால் அனுபவிக்கிறார்கள்.

என்னதான் அனுபவித்தாலும் நான் அவர்களுச் சொல்வேன்.   இதே காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் திருந்தி, வருவார்களேயானால் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக்கழகம்  அவர்களை ஆதரிக்கும்.  எதற்கு என்றால்,  ஓட்டுப்போட அல்ல.  அவர்களுக்கு வந்த தீங்குகளை மாற்றியமைக்க; உடைத்து நொறுக்க.   அவர்களை மன்னித்து அவர்களை பொறுத்துக்கொண்டு, இதுவரை அவர்கள் செய்த காரியங்களை யெல்லாம் எண்ணிப்பாராமல்,  அவர்களுக்கு பொதுமன்னிப்பு தருவது என்ற முறையிலே.   நன்றி மறந்த வர்கள் யாராக இருந்தாலும், திராவிட முன்னேற்றகழகம்  அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந் தாலும், மனைவியாக இருந்தாலும், மகனான இருந்தாலும்,  நன்றி மறந்தவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் மன்னிக்காது.  என்னைப்பொறுத்தவரை எனக்கு கொள்கைதான் முக்கியம். குழந்தை, குட்டிகள் அல்ல’’ என்று தெரிவித்தார்.

0 Responses to மகனாக இருந்தாலும் நன்றி மறந்தவர்களை திமுக மன்னிக்காது: எனக்கு கொள்கைதான் முக்கியம்; குழந்தை, குட்டிகள் அல்ல: கலைஞர் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com