சீராகத் திருத்தப்பட்ட புருவங்களுடன் ஒரு பெண்போராளி, கோர்ட் அணிந்த ஆங்கில வாத்தியார் என ஒரு ஸ்டில் பார்த்தவுடனேயே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது 'இனம்'. இது பாராட்டா? எள்ளலா ?
என்பது புரியாமலேயே தொடர்கையில், பத்தியின் இறுதியில் குத்தி முற்று வைத்திருக்கிறது ஜீ.உமாஜியின் இந்தப் பேஸ்புக் சமூக வலைத்தளக் குறிப்பு. தொடர்ந்து படியுங்கள் புரியும்..
சீராகத் திருத்தப்பட்ட புருவங்களுடன் ஒரு பெண்போராளி, கோர்ட் அணிந்த ஆங்கில வாத்தியார் என ஒரு ஸ்டில் பார்த்தவுடனேயே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது 'இனம்'.
ஒரு படைப்பாளியின் தேடல் அர்ப்பணிப்பு இப்படித்தான் இருக்கும். கதை நிகழும் பிரதேசத்தின் உண்மையான நிறத்தை, வாழ்க்கையை அந்தப் பிரதேசத்தை அதுவரை பார்த்தேயிராத ஒரு பார்வையாளனுக்கும் அப்படியே கண்முன் கொண்டுவர வேண்டும். இப்படியெல்லாம் வன்னியில் இருந்திருக்கிறார்கள் என்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். நான் அங்கு செல்லாததால் பார்த்ததில்லை. எவ்வளவு ஆய்வு செய்ய, மினக்கெட வேண்டும்? இதுதான் உண்மையான படைப்பாளியின் கடமை! நேர்மை!
இனம் ட்ரெய்லரைத் தமிழர்கள் பலரும் இறுமாப்புடன், பெருமையுடன் பகிர்ந்துகொண்டபோது சந்தோஷ் சிவன் என்கிற பெயர் சற்றே சிந்திக்க வைத்தது. மணிரத்னத்துக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர். அவதானித்தவரையில், இருவரும் ஒத்த அலைவரிசையுடையவர்கள். மணிரத்னம் பற்றிப் பேச வேண்டியதில்லை. எந்த ஒரு சிக்கலான பிரச்சினையையும் முழுமையாகப் புரிந்து, மிகச்சரியான முறையில் அணுகி தீர்வை முன்வைப்பவர். படைப்பாளி அறிவுஜீவியாக இருக்கும்போது படைப்பின் தரம் உயர்கிறது. அதே படைப்பாளி தேசியவாதியாகவும் இருந்துவிட்டால், அங்கேதான் படைப்பு உச்சம் பெறுகிறது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' வெளியானபோது "ச்சா அப்பிடியே எங்கட பிரச்சினையை அப்பிடியே காட்டியிருக்கான்டா" என நம்மவர் பெருமைப்பட்டது தெரிந்ததே. அதில வந்த சண்டைக்காட்சியும் , இடம்பெயர்வும் அவ்வளவு யதார்த்தமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தெரியும். மணிரத்னம், சந்தோஷ் சிவன் இருவருமே இந்த அரசின் தேசிய விருதைச் சொல்லி வைத்துப் பெறும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள்.
'இனம்' - சந்தோஷ் சிவன் என்றதுமே பார்க்க முடியாதெனத் தோன்றியது. சில உண்மைகளை எதிர்கொள்ளத் துணிவில்லை என்பதே காரணம். சில படைப்பாளிகள் கூடத் தனி 'இனம்'தான் போலும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம்!
என் தமிழ் உணர்வை வியாபாரமாக ஆக்கமாட்டேன் - கருணாஸ்!
நன்றி: ஜீ.உமாஜி
0 Responses to சில படைப்பாளிகள் கூடத் தனி 'இனம்'தான்..