தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா அமெரிக்காவின் தீர்மானம் நீர்த்துப் போன ஒன்று என்று கூறியுள்ளார். கருணாநிதி அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், பாஜக நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளது என்று சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளதோடு, இப்படித் தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால்தான் இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்திய கலந்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருக்க வேண்டுமென்பது தமது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ள சிதம்பரம், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்காமல் விட்டது வெளியுறவுத் துறை அதிகாரிகள் எடுத்த முடிவு என்றும், இது மத்திய அமைச்சரவை எடுத்த முடிவல்ல என்றும் கூறியுள்ளார். அதோடு, மதசார்பின்மைக்கு மையமே காங்கிரஸ்தான் என்றும், இதில் திமுக இணைந்தால் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
0 Responses to தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை!: ப.சிதம்பரம்