Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தமது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, ஏனைய நாடுகளை மிரட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 
தங்களுக்கு ஆதரவாக செயற்படுமாறு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை அமெரிக்கா மிரட்டி இருக்காவிட்டால், அந்த நாடுகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இந்த செய்தியை நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட நாடுகளே இதற்கு ஆதரவளித்தன.

மாறாக அமெரிக்கா எந்த நாட்டையும் பலவந்தப்படுத்தவோ, மிரட்டவோ இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரேரணைக்கு வாக்களிக்குமாறு அமெரிக்கா மிரட்டியதாக குற்றச்சாட்டு நிராகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com