Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசிய கோலாலம்பூரில் இருந்து Seoul எனும் இடத்திற்கு பயணித்த மலேசிய ஏர்லைன் Airbus A330-300 விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு

ஏற்படவே அவ்விமானம் ஹாங்ஹாங்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படமால் விமானம் திங்கள் அதிகாலை ஹாங்ஹாங்கில் தரையிறக்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது.

மலேசிய ஏர்லைன் நிறுவனம் இது பற்றி தெரிவிக்கும் போது 271 பயணிகளுடன் Seoul நோக்கி புறப்பட்ட விமானத்தில்  ஜெனரேட்டர் செயலிழப்பு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டது எனினும் அதனது பிரதான மின் வழங்கும் பகுதிகளில் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. 

MH066 விமானத்தில் பயணித்தவர்கள் மற்றைய விமான சேவைகளில் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

மாயமான விமானம்! அறிவியலுக்கு சவால்!

0 Responses to மற்றுமொரு மலேசிய ஏர்லைன் விமானத்தில் கோளாறு : ஹாங்ஹாங்கில் அவசர தரையிறக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com