Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோபி மற்றும் அப்பன் என்கிற இரண்டு விடுதலைப் புலி சந்தேக நபர்களை கைது செய்தவதற்காகவே வடக்கில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தவிர்த்து அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்தும் நோக்கம் பொலிஸாருக்கு இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த கோபி மற்றும் அப்பன் ஆகியோர் வடக்கில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான சதித் திட்டங்களை வகுத்து வருவது தொடர்பிலான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. இதனடிப்படையிலேயே, இவ்விருவரையும் உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தேடுதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் முப்பது வருடகாலமாக பயங்கரவாதிகளால் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையை மீண்டும் தோற்றுவிப்பதே இவர்களது பிரதான குறிக்கோளாகவுள்ளது. மோதல் காலத்தில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த இவர்கள் நாட்டில் நிலவும் சமாதானத்தை பயன்படுத்தி மீண்டும் வடக்கிற்கு திரும்பியிருக்க வேண்டுமென்று சந்தேகமும் பாதுகாப்பு தரப்பினருக்கு எழுந்துள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாடும் நாட்டு மக்களும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். எனவே, இதனை புரிந்து கொண்டவர்களாக வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கோபி மற்றும் அப்பனை கைதுசெய்வதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்களை துன்புறுத்தும் நோக்கம் இல்லை: இலங்கை பொலிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com