ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்தமை கவலையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை அழுத்தமான விடயங்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கத்திற்கு ஆதரவா இருப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கடந்த காலங்களிலும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்து வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றியடைந்தது கவலையளிக்கிறது: ஐ.தே.க