விசா மோசடி வழக்கில் இருந்து அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதராக இருந்த தேவயானி கொப்ரகடே விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கொப்ரகடே அமெரிக்க போலீசாரால் மிக அவமானகரமான நிலையில், நடு ரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். பணிப்பெண் ஒருவருக்கு விசா பெறுவது தொடர்பாக போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தார் என்கிற குற்றசாட்டு தேவயானி மீது வைக்கப்பட்டது.
இதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவி செய்யப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில், தேவயானியை இந்திய திரும்பப் பெற்று, அவருக்கு இந்திய வெளியுறவுத் துறையில் வேலையும் வழங்கியது. இந்நிலையில் தேவயானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் தேவயானியை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
தேவயானி மீது பொய்யான குற்றசாட்டுப் பதிவாகியுள்ளது என்றும், அவர் ஐநா உறுப்பினர் என்றும் கூறியுள்ள நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து தேவயானியை விடுதலை செய்துள்ளது.
4tamilmedia
0 Responses to விசா மோசடி வழக்கில் இருந்து தேவயானி கொப்ரகடே விடுதலை!