Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள 6500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் அரசாங்கத்திற்குரியவை என்று இராணுவம் அறிவித்துள்ளது.

அத்தோடு, அந்தப் பகுதியில் மீள்குடியேற்றங்கள் ஏதும் செய்யப்படமாட்டாது என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, வலிகாமம் வடக்கு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை இராணுவத்தின் 515வது பிரிவின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே, இராணுவ அதிகாரிகள் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்களின் பிரதிநிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கிடையிலும் பெரும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனபோதிலும், இராணுவத்தினர் காணிகளை விடுவிக்கும் சாத்தியம் ஏதும் இல்லை என்று உறுதிபடக் கூறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

4tamilmedia

0 Responses to வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்குரியது: இராணுவம் தெரிவிப்பு; மக்கள் அதிர்ப்தி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com